Friday, July 2, 2010

யா/மல்லாகம் மகா வித்தியாலயத்தில்

  • இங்கு நான் 2001 ம் ஆண்டு பங்குனி மாதம் 01ம் திகதி முதல் நியமனம் பெற்றேன்.
  • அங்கு அப்போது அதிபராக திரு. நாகேந்திரசீலன் அவர்கள் கடமையாற்றினார்.
  • நான் அங்கு சென்ற போது ஒரே ஒரு கணனி மட்டும் காணப்பட்டது. ஆனால் அதை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கவில்லை. 
  • நான் முன்வந்து அதை பயன்படுத்திப் பாடசாலைக்கு பலவழிகளில் உதவினோன்.
  • அதிபர் அவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டு எனக்கு பலவழிகளில் உதவி செய்து பாடசாலைக்கு என்னிடம்மிருந்து பலன்களைப் பெற்றார். 
  •  நான் விரும்பும் அதிபர்களில் அவரும் ஒருவர்.
  • அவர் சிறந்த குணமும் ஆளுமையும் உடையவராக இருந்தார்.
  • அப்பாடசாலையில் நான் 2001-03-01 தொடக்கம் 2002-01-22 வரையான குறுகிய காலப்பகுதியில் கற்பித்திருந்தாலும், அங்கு கற்பித்த காலத்தை இன்றும் நினைத்துப் பார்க்கமுடியும்.

என்னைப் பற்றி

நான் 1976 இல் யாழ்ப்பாணத்தில பிறந்தேன். ஆரம்பக் கல்வியை புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் தரம் 6 முதல் உயர்தரம் வரை புனித பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்று 1995 இல் உயர்தரம் பரீட்சை எழுதி அதில் B 3C பெறுபேற்றைப் பெற்றேன்.


பின்னர் 1997 இல் வவுனியா கல்வியியல் கல்லூரிக்குத் தெரிவாகி அங்கு ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்தேன்.

பின்னர் முதல் நியமனம் 2001ம் ஆண்டு யா/மல்லாகம் மகா வித்தியாலயத்தில் ஏற்று அங்கு ஒருவருடமாகக் கடமையாற்றினேன்.

பின்னர் 2002 தை மாத மளவில் திருகோணமலைக்கு இடமாற்றம் பெற்று தி/குளக்கோட்டன் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டேன். பின்னர் 2004 இல் தி/உவர்மலை விவேகானந்தா கல்லுரிக்கு இடமாற்றம் பெற்று பெற்றேன்.

அதன்பின்னர் 2008 இல் தி/நிலாவெளித் தமிழ் மகா வித்தியாலயத்திற்று இடமாற்றப்பட்டேன்.

இன்று வரை(2010) அங்கு கடமையாற்றி வருகின்றேன்.

ஆசிரியர் தொழிலை நான் விரும்பி ஏற்கவில்லை, ஆனால் இன்று அதை மிகவும் நேசித்து பணியாற்றுகின்றேன். எனது கல்வியறிவு உயர்வதற்கு ஆசிரியத் தொழிலே காரணம்.

ஆசிரியத் தொழிலில் என்னால் செய்யப்பட்ட பணிகளை/செயற்பாடுகளை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.