யா/மல்லாகம் மகா வித்தியாலயத்தில்
- இங்கு நான் 2001 ம் ஆண்டு பங்குனி மாதம் 01ம் திகதி முதல் நியமனம் பெற்றேன்.
- அங்கு அப்போது அதிபராக திரு. நாகேந்திரசீலன் அவர்கள் கடமையாற்றினார்.
- நான் அங்கு சென்ற போது ஒரே ஒரு கணனி மட்டும் காணப்பட்டது. ஆனால் அதை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கவில்லை.
- நான் முன்வந்து அதை பயன்படுத்திப் பாடசாலைக்கு பலவழிகளில் உதவினோன்.
- அதிபர் அவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டு எனக்கு பலவழிகளில் உதவி செய்து பாடசாலைக்கு என்னிடம்மிருந்து பலன்களைப் பெற்றார்.
- நான் விரும்பும் அதிபர்களில் அவரும் ஒருவர்.
- அவர் சிறந்த குணமும் ஆளுமையும் உடையவராக இருந்தார்.
- அப்பாடசாலையில் நான் 2001-03-01 தொடக்கம் 2002-01-22 வரையான குறுகிய காலப்பகுதியில் கற்பித்திருந்தாலும், அங்கு கற்பித்த காலத்தை இன்றும் நினைத்துப் பார்க்கமுடியும்.